வெற்றிக்காக வெற்றிமாறனிடம் படம் கேட்ட தனுஷ்.. செவி சாய்க்காத இயக்குனர் வெற்றிமாறன்
தனுஷ் - வெற்றிமாறன்
தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணிகளில் ஒன்று தனுஷ் - வெற்றிமாறன். ஆம், இவர்கள் இருவரும் முதன் முதலில் இணைந்த பொல்லாதவன் படம் சூப்பர்ஹிட்டானது. அதை தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை என தொடர் வெற்றியை சந்தித்தார்கள்.
இதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் ப்ளாக் பஸ்டர் வெற்றியை இருவருக்கும் பெற்று தந்தது. குறிப்பாக சொல்லவேண்டும் என்று வசூலில் மாபெரும் சாதனையை அசுரன் திரைப்படம் படைத்தது.
அசுரன் படத்திற்கு பிறகு தனுஷ் சில சறுக்கல்களை மட்டுமே திரைவாழ்க்கையில் சந்தித்து வருகிறார். இதனால், மீண்டும் உங்களுடன் இணைந்து ஒரு படம் பண்ணவேண்டும் என்று, வெற்றிமாறனிடம் கேட்டுள்ளாராம் தனுஷ்.
[8WEM1 ]
ஆனால், அதற்கு எந்த பதிலையும் சொல்லாமல் மௌனம் சாதித்து வருகிறாராம் இயக்குனர் வெற்றிமாறன். இதற்க்கு காரணம் வெற்றிமாறனின் கைவசம் விடுதலை, வாடிவாசல் படங்கள் உள்ளது. இதுமட்டுமின்றி ஏற்கனவே ஒரு பேட்டியில், வெற்றிமாறன் விஜய்க்காக ஒரு படம் பண்ணப்போவதாக கூறியிருந்தார்.
மேலும், ஜூனியர் என்.டி.ஆர் விரைவில் வெற்றிமாறனுடன் சேர்ந்து படம் பண்ணப்போவதாகவும் சில தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தான் தனுஷிடம் மௌனமாக இருக்கிறாராம் வெற்றிமாறன்.

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
