அறிமுக நாயகியுடன் ஆரம்பமான தனுஷின் புதிய படம் ! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..
தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் இவர் தொடர்ந்து பல முக்கிய இயக்குனர்களின் படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளார்.
மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படம் அத்ராங்கி ரே ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதில் தனுஷின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதனிடையே தனுஷ் நடிப்பில் மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வந்தன. அப்படங்களை முடிந்துள்ள தனுஷ் தற்போது தனது புதிய படத்தில் இணைந்துள்ளார்.
ஆம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி திரைப்படத்தில் தான் தனுஷ் தற்போது இணைந்துள்ளார். இப்படத்தின் பூஜை தற்போது நடைபெற்றுள்ளது இதில் தனுஷுடன் நடிகை சம்யுக்தா மேனனும் கலந்து கொண்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri