தனுஷின் படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரன்! எந்த மாதிரி படம் தெரியுமா?
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தனுஷ் ஹிந்தி, பாலிவுட், தெலுங்கு என கலக்கி வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் அத்ராங்கி ரே, The Gray Man உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே அடுத்தடுத்து தனுஷின் படத்தை இயக்கவுள்ள பல முக்கிய வரிசையில் தற்போது மேலும் ஒரு இயக்குனர் இணைந்துள்ளார்.
ஆம், அருண் மாதேஸ்வரன் அடுத்து தனுஷ் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் கூட்டணி அமைக்கும் படம் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்குனராக அறிமுகமாகவுள்ள ROCKY திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அப்படத்தை தொடர்ந்து அவர் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனை வைத்து சாணி காயிதம் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri