தனுஷின் அடுத்த படம்.. இந்த உண்மை சம்பவம் தான் கதையா?
நடிகர் தனுஷ் தற்போது கோலிவுட்டில் படுபிஸியான ஒருவராக இருந்து வருகிறார். படங்கள் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இயக்குனராகவும் அவர் பல படங்களை இயக்கி வருகிறார்.
தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி இருக்கும் அவர், குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் இயக்கி இருக்கும் மற்றொரு படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் அடுத்த வாரம் பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
மாரி செல்வராஜ் உடன் கூட்டணி
இந்நிலையில் தனுஷ் தனது அடுத்த படத்திற்காக மாரி செல்வராஜ் உடன் கூட்டணி சேர இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது. கர்ணன் படத்திற்கு பிறகு அவர்கள் கூட்டணி சேர இருக்கின்றனர்.
1970ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.