வெளிவந்தது இயக்குனர் தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் அதிரடி அப்டேட்..
இயக்குனர் தனுஷ்
நடிகராக முன்னணி அந்தஸ்தில் இருக்கும் தனுஷ் பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன்பின் சில ஆண்டுகள் கழித்து தனுஷ் இயக்கிய திரைப்படம் தான் ராயன். இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக ராயன் இருக்கிறது.
ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி வரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தில் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் தான் ஹீரோவாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளிவந்த கோல்டன் ஸ்பாரோ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
அதிரடி அப்டேட்
இப்பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார். ரசிகர்கள் மற்றும் இளைஞர்களை கவர்ந்து தற்போது, இந்த பாடல் யூடியூபில் 3.2 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.
அதற்கு நன்றி தெரிவித்து ஜிவி. பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மேலும், இப்படத்தின் அடுத்த பாடல் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்றும் இதனை தனுஷ் பாடியுள்ளதாகவும் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
The #GoldenSparrow hits 32 million … thanks to my director @dhanushkraja and team #NEEK @theSreyas @wunderbarfilms pic.twitter.com/kAd30Nzy6o
— G.V.Prakash Kumar (@gvprakash) October 7, 2024
Next single #NEEK cooking and loading in few weeks …. Let’s have a little @dhanushkraja soup zone this time ???? …
— G.V.Prakash Kumar (@gvprakash) October 7, 2024