தனுஷ் நடிக்கப்போகும் அடுத்த படம்.. வெறித்தனமான அப்டேட் இதோ
தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமன்றி இயக்குனராகவும் தற்போது வலம் வருகிறார்.
இவர் இயக்கியும், நடித்தும் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ராயன். இப்படத்தை தொடர்ந்து, தற்போது தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
வெறித்தனமான அப்டேட்
இந்நிலையில், அடுத்து தனுஷ் நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தனுஷ் போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, சுமார் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.