தனுஷ் நடிக்கப்போகும் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்.. இயக்குநர் இவரா
தனுஷ்
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். நடிகராக இருந்து இயக்குநராக உயர்ந்த தனுஷ் இயக்கத்தில் தற்போது இட்லி கடை மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

அதை தாண்டி குபேரா படத்தில் நடித்தும் வருகிறார். மேலும், அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 - ம் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், அடுத்து தனுஷ் எந்த இயக்குநர் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில், அடுத்து தனுஷ் நடிக்கப்போகும் படம் குறித்து தற்போது ஒரு மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
இயக்குநர் இவரா
அதாவது லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தனுஷிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும். கதையை கேட்டு தனுஷ் மிரண்டு விட்டதாகவும்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ளதாகவும். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan