4 நாட்களாக ஓடிக் கொண்டிருக்கும் தனுஷின் ஓம்... இதுவரையிலான கலெக்ஷன் விவரம்
தனுஷின் ஓம்
நடிகர் தனுஷ், இவர் பட செய்திகளை தாண்டி அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பில் இருந்து அதிகம் வருகிறது.
ஆனால் தனுஷ் அந்த சலசலப்பை பற்றி எல்லாம் பேசாமல் தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஓம்.
கடந்த நவம்பர் 20ம் தேதி வெளியான இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைக்க தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது.
உளவாளி மற்றும் செம்மரக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை தமிழ்நாடு, துபாய் என சர்வதேசக் கடத்தல் வலையமைப்பைச் சுற்றி விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

வசூல் விவரம்
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரிலீஸ் ஆகி 4 நாள் முடிவில் படம் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் 4 நாள் முடிவில் ரூ. 98 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம்.
அறிமுகப் போட்டியிலேயே 4 பந்தில் 4 விக்கெட் - கிரிக்கெட்டுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய ஜம்ஷெட் ஆலம் News Lankasri
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உறுதியளித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu