ஓம்.. தனுஷ் நடிக்கும் புஷ்பா படமா? விமர்சனத்திற்கு ராஜ்குமார் பெரியசாமி பதில்
தனுஷ் அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு ஓம் என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இருந்தது.
அதே நேரத்தில் சில விமர்சனங்களும் இணையத்தில் வர தொடங்கி இருக்கிறது. இந்த படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்து இருக்கின்றனர். மம்மூட்டி முக்கிய ரோலில் நடித்து வருகிறாராம்.
ஓம் படம் சேப்டர் 1 என்கிற பெயரில் முதல் பாகம் வரும் அக்டோபர் 16ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

புஷ்பா போல செம்மர கடத்தல் கதையா?
ஓம் படத்தின் டீஸர் பார்க்கும்போது இது தனுஷ் நடிக்கும் புஷ்பா படம் போல இருக்கு என செய்தியாளர் ஒருவர் இயக்குனர் ராஜ்குமாரிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு பதில் அளித்த அவர்..
"நீங்கள் டீசரில் பார்த்தது ஒரு காட்சி. அதை பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் தோன்றும். அந்த விவாதத்தை தொடங்க தான் வீடியோவை நாங்கள் வெளியிடுகிறோம்."
"அதை தாண்டி படத்தில் பல விஷயங்கள் இருக்கு. அது ஒவ்வொன்றாக வரும்போது தெரியும்."
"சென்சேஷனுக்காக நான் இந்த டைட்டிலை வைக்கவில்லை. கதை எழுதும்போதே நான் இந்த டைட்டிலை எழுதிவிட்டேன். "
"செம்மர கடத்தல் செய்யும் தமிழர்களை பெருமைப்படுத்தும் வகையில் கதை இருக்குமா என கேட்கிறார்கள். இது யாரையும் பெருமைப்படுத்தும் படம் அல்ல."
இவ்வாறு ராஜ்குமார் பெரியசாமி கூறி இருக்கிறார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan