தட்டி விடாதீங்க.. ராயன் தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் மேடையில் ஓப்பனாக பதிலடி
மகாராஜா, மெய்யழகன் போன்ற படங்களுக்கு கொடுக்காமல் ராயன் படத்திற்கு சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருது கொடுக்கப்பட்டது சமீபத்தில் இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது.
அது பற்றி தனுஷ் தற்போது பதிலடி கொடுத்து மேடையில் பேசி இருக்கிறார்.

தட்டி விடாதீங்க..
"ராயனுக்கு தேசிய விருது கொடுத்தார்கள். அந்த வருடம் அதை விட தகுதியான பல படங்கள் இருக்கிறது. அந்த படத்தின் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதை நான் முழுதாக மதிக்கிறேன்.
நான் நடித்த அது ஒரு கனா காலம் படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என சொன்னார்கள். நான் சின்ன பையன் என்பதால் ஆசையுடன் காத்திருந்தேன். ஆனால் கிடைக்கவில்லை.
புதுப்பேட்டைக்கும் அப்படி சொன்னாங்க. ஆனால் கிடைக்கவில்லை. அதன்பின் 3, மயக்கம் என்ன, மரியான், ராஞ்சனா, வட சென்னை, கர்ணன் என இவ்ளோ லிஸ்ட் இருக்கு. எவ்வளவு தான் முயற்சி பண்ணாலும் அதை சொல்ல முடியாது. தானாக தான் அமைய வேண்டும்.
இப்போது கேட்பவர்கள் அப்போது ஏன் கேட்கவில்லை. எனக்கு 2 தேசிய விருது கிடைச்சி இருக்கு, தட்டிவிடாதீங்க, தட்டிகொடுங்க."
இவ்வாறு தனுஷ் பேசி இருக்கிறார்.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri