தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் கதை இதுதானா! இணையத்தில் லீக்..
தனுஷின் ராயன்
நடிகராக தமிழ் சினிமாவில் பயணித்து வந்த தனுஷ், பா. பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷே இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ் என பலரும் நடிக்க, தனுஷை நடிகராக செதுக்கிய இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
ராயன் படத்தின் கதை
பெரிதும் எதிர்பார்ப்பில் வருகிற ஜூன் மாதம் வெளியாக காத்திருக்கும் ராயன் திரைப்படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது.
தனுஷின் குடும்பத்தை கொலை செய்து விடுகிறார்கள். தன் குடும்பத்தை கொலை செய்தவர்களை தேடி செல்லும் தனுஷ், ஒரு Under world-க்குள் செல்ல, அதன்பின் என்ன நடந்தது, தன் குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்கினாரா என்பது தான் ராயன் படத்தின் கதை என தகவல் வெளியாகியுள்ளது.
ராயன் படத்தின் கதை குறித்து இணையத்தில் கசிந்துள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் தற்போது படுவைரலாகி வருகிறது. ஆனால், இது தான் ராயன் படத்தின் கதை என எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
