தனுஷ் இயக்கி, நடிக்கும் ராயன் திரைப்படத்தின் கதை இதுதானா?- கசிந்த தகவல்
நடிகர் தனுஷ்
திரையுலகில் ஆரம்பத்தில் நிறைய மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு துவண்டு போகாமல் முயற்சி செய்து தனது திறமையை காட்டி இப்போது சினிமாதுறை பாராட்டும் வண்ணம் வளர்ந்திருப்பவர் தான் நடிகர் தனுஷ்.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை படம் நடிக்கும் தனுஷ் நடிகராக மட்டுமில்லாது இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பல திறமைகளை வெளிக்காட்டி இருக்கிறார். தற்போது தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இதில் தனுஷுடன் இணைந்து துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர்.

படத்தின் கதை
கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பி முடிவுக்கு வந்ததாக தனுஷே தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்து இருந்தார், ஃபஸ்ட் லுக்கும் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகி இருந்தது.
இளமை காலத்தில் நடிகர் நாகேஷின் முக்கிய படத்தில் நடித்துள்ளாரா கவுண்டமணி- இதுவரை யாருமே கவனிக்கலையே, இதோ பாருங்க
அதில் தனுஷ் கையில் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் முறுக்கிக்கொண்டு நிற்கிறார். பின்னால் காளிதாஸ், சந்தீப் கிஷன் கத்தியுடன் எட்டி பார்க்கிறார்கள். படத்தில் தனுஷ், சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் 3 பேரும் அண்ணன்-தம்பிகளாக நடித்துள்ளனராம்.
பாஸ்ட் புட் கடை நடத்திவரும் இந்த 3 பேரும் அடிப்படையிலேயே கேங்ஸ்டர்களாக இருக்கின்றனர். 3 பேரும் இப்படி ஆனதற்கு காரணம் என்ன என்பதே இப்படத்தின் கதையாம்.
