நடிகர் விஜய்யின் கெரியரில் முக்கிய படங்களில் ஒன்று பகவதி. அந்த படத்தில் விஜய்யின் தம்பியாக ஜெய் நடித்து இருப்பார். அவருக்கு ஒரு பெரிய அடையாளத்தையே அந்த உருவாக்கி கொடுத்தது.
ஆனால் அந்த ரோலில் நடிக்க தனுஷை தான் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அணுகினாராம். ஆனால் அவர் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம். துள்ளுவதோ இளமை ரிலீஸ் ஆகி இருந்த நேரத்தில் தான் பகவதி பட வாய்ப்பு தனுஷை தேடி சென்றிருக்கிறது.

காரணம்
தனுஷ் “தம்பி ரோல் தனக்கு செட் ஆகாது” என வெளிப்படையாகவே கூறிவிட்டாராம். விஜய் - விஜயகாந்த் உடன் நடித்தபோது B, C சென்டர்களில் இறங்கியது போல இந்த படம் உங்களுக்கு அமையும் என இயக்குனர் சொல்ல.
அதெல்லாம் தேவையில்லை, காதல் கொண்டேன் படம் வந்தாலே அது எனக்கு நடக்கும் என கூறினாராம் தனுஷ்.
இந்த விஷயத்தை இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தற்போது ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
