பதிலடி கொடுத்த தனுஷ்! தோற்றத்தை வைத்து ட்ரோல் செய்பவர்களுக்கு அவர் கொடுத்த பதில்
நடிகர் தனுஷ் தற்போது தமிழ்,சினிமா, பாலிவுட்டை தாண்டி தற்போது ஹாலிவுட் வரை கால்பதித்துவிட்டார். அவர் நடித்து இருக்கும் க்ரே மேன் படம் தற்போது உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் தனுஷுக்கு சிறிய கதாபாத்திரம் தான் என்பதால், அதிக எதிர்பார்ப்புடன் பார்த்த தனுஷ் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் தனுஷ் இந்த படத்தின் விளம்பரத்திற்காக அளித்திருக்கும் பேட்டியில் தன்னை ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
"இளம் வயது தனுஷுக்கு நீங்கள் ஒரு அட்வைஸ் கொடுக்க வேண்டும் என்றால் என்ன கொடுப்பீர்கள்?" என கேட்டதற்கு "உன்னுடைய தோற்றத்தை வைத்து உன்னை ட்ரோல் செய்பவர்களை நினைத்து வருத்தப்படாதே. ஒரு நாள் ஒரு பெரிய ஹாலிவுட் ஹீரோ உன்னை பார்த்து 'Sexy Tamil Friend" என சொல்வார்" என தனுஷ் கூறி இருக்கிறார்.
க்ரே மேன் படத்தில் வரும் காட்சியை குறிப்பிட்டு தான் இப்படி தனுஷ் பேசி இருக்கிறார்.
.@dhanushkraja has a message for his younger self and it’s the most badass advice we’ve ever heard ❤️🔥 pic.twitter.com/XiCf4IcND0
— Netflix India (@NetflixIndia) July 24, 2022