அனிருத்தால் நான் தப்பித்தேன்.. தனுஷ் போட்டுடைத்த ரகசியம்
தனுஷ்
தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இவர் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தையும் தனுஷ் தான் இயக்கியிருந்தார். தனுஷ் இட்லி கடை படத்தில் மட்டுமின்றி இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார்.
இப்படி தனது கரியரில் உச்சக்கட்ட பிஸியாக இருக்கும் தனுஷ் நிகழ்ச்சி ஒன்றில் சில வருடங்களுக்கு முன் அனிருத் குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரகசியம்
அதில், "என்னை தான் முன்பெல்லாம் அனைவரும் ஒல்லி நடிகர் என்று செய்திகளில் எழுதுவார்கள். ஆனால், தற்போது அனிருத் வந்த பின் என்னை அது போன்று யாரும் எழுதுவது இல்லை.
அதற்கு காரணம் என்னை விட அனிருத் ஒல்லியாக இருக்கிறார். அதனால் நான் தப்பித்து விட்டேன். ஆனால் என்ன தான் நாங்கள் ஒல்லியாக இருந்தாலும் வேலை விஷயத்தில் இருவருமே கில்லிதான்" என்று கூறியுள்ளார்.

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா? IBC Tamilnadu
