தனுஷ் 51 ஷூட்டிங் அனுமதியை ரத்து செய்த போலீஸ்! இப்படி ஒரு லுக்கில் நடிக்கிறாரா தனுஷ்
நடிகர் தனுஷ் தற்போது அவரது 51வது படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது திருப்பதியில் தொடங்கி இருக்கிறது.
திருப்பதி மலையின் அடிவாரத்தில் இருக்கும் அலிபிரி என்ற இடத்தில் ஷூட்டிங் நடந்த நிலையில், அதற்காக கோவிலுக்கு செல்லும் பஸ் மற்றும் பக்தர்களின் சொந்த வாகனங்களும் வேறு வழியில் திருப்பிவிடப்பட்டன.
தனுஷ் பிச்சைக்காரன் லுக்கில் தான் நடித்து இருக்கிறார்.

ஷூட்டிங் அனுமதி ரத்து
பக்தர்கள் அதிகம் பாதிப்பை சந்தித்த நிலையில், தனுஷ் பட ஷூட்டிங்கிற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஷூட்டிங் எதிராக போராட்டமும் நடந்தது.
இந்நிலையில் ஷூட்டிங் நடத்த கொடுக்கப்பட்ட அனுமதியை போலீசார் ரத்து செய்திருக்கின்றனர்.
திருப்பதில இந்தமாறி லுக்ல Shoot பன்னா கதற தான் செய்வானுங்க .. #Bjp ?? #தாராவி #D51 @dhanushkraja pic.twitter.com/vPUMZbGYYG
— தனுஷ் Vicky™ (@dfan_vicky) January 30, 2024