கர்ணன் படத்தை திரையரங்கில் வெளியிடுவதால் நன்றி கூறிய தனுஷ், ஜகமே தந்திரம் படம் குறித்து எதுவும் பேசாதது ஏன்?
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் கர்ணன், இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என டீஸர் உடன் அறிவிக்கப்பட்டது.
மேலும் தற்போது இது குறித்து தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் கர்ணன் படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு நன்றி தெரிவித்தது மட்டுமின்றி இது பலருக்கும் உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.
இதனிடையே ஜகமே தந்திரம் திரைப்படம் அடுத்த மாதம் பிரபல OTT தளத்தில் வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து தனுஷ் எதுவும் பேசாமல் உள்ளார்.
Karnan release announcement. https://t.co/WKYC5PXxn8 pic.twitter.com/hW37A3Y2o2
— Dhanush (@dhanushkraja) January 31, 2021