அவெஞ்சர் பட நடிகருடன் தனுஷ் ! முதல்முறையாக வெளியான அவரின் ஹாலிவுட் பட புகைப்படம்..
பிஸியான நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.
இவர் நடிப்பில் கடைசியாக மாறன் திரைப்படம் வெளியானது, அப்படத்தை தொடர்ந்து திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
மேலும் சமீபத்தில் கூட செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்து வந்த நானே வருவேன் திரைப்படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்ததாக அறிவித்து இருந்தனர்.

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஷ்
இதற்கிடையே அவ்ங்கர்ஸ் பட இயக்குனர்கள் இயக்கத்தில் The Grayman படத்தில் நடித்திருந்தார். பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள அப்படத்தை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் அப்படத்திலிருந்து ஒரு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் தனுஷ் ஹாலிவுட் நடிகர் கிறிஸ் எவன்ஸ் இருக்கும் புகைப்படமும் உள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

தெலுங்கில் ரீமேக் ஆகும் தளபதி விஜய்யின் சூப்பர்ஹிட் திரைப்படம்.. ஹீரோவாக நடிக்கப்போவது இவரா?