சமூக வளைத்தளத்தில் தனுஷ்44 படத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை..இது தான் காரணம்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் தனுஷ் நடித்து முடித்திருக்கும் படம் தான் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.
ரசிகர்களின் favourite காம்போவான D&A (தனுஷ் & அனிருத்) இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இப்படத்தில் ஜோடியாக நடிகைகள் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கின்றனர் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா, பிரகாஷ்ராஜூம் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பு குறித்து தான் இப்பொழுது படக்குழுவினருக்கு வார்னிங் விடப்பட்டுள்ளது.
அதாவது திருச்சிற்றம்பலம் தேவாரம் திருமுறைகளில் பயன்படுத்தக்கூடிய புனிதச் சொல் என்பதால் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி இருந்தால் மகிழ்ச்சி என்றும் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால் சிவனடியார் கூட்டம் சேர்ந்து கடுமையமான எதிர்ப்பை தெரிவிப்போம் என சமூக வலைத்தளங்களில் எச்சரித்துள்ளனர்.