வெற்றி கூட்டணியில் மீண்டும் இணையும் தனுஷ்.. இனி அதிரடி தான்
நடிகர் தனுஷ்
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாத்தி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 100 கோடி வசூலில் கடந்தது.
இதை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடித்து வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கிவரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள்.
மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி
இப்படத்தில் நடித்தபின் தன்னுடைய 50வது படத்தை இயக்கி, அதில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதை முடித்தபின் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.
இதற்க்கு முன் இவர்கள் இருவரும் இணைந்து கர்ணன் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்துள்ளனர்.
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்களாம். மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்க இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா லேடி சூப்பர்ஸ்டார்.. இயக்குனர் யார் தெரியுமா

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
