ரஜினியாக நடிக்கனும், இந்த படத்தை ரீமேக் செய்வேன்.. தனுஷ் ஆசை நிறைவேறுமா?

Dhanush Rajinikanth Biopic
By Parthiban.A Dec 22, 2021 08:50 AM GMT
Report

நடிகர் தனுஷ் தற்போது அத்ராங்கி ரே என்ற ஹிந்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக தற்போது பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார் தனுஷ்.

சமீபத்தில் சாரா அலி கான் உடன் சேர்ந்து காபி வித் கரண் ஷோவில் பங்கேற்றார் தனுஷ். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. உங்களின் எந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு தனுஷ் பொல்லாதவன் படத்தை தான் கூறினார்.

அதை இயக்கியதும் வெற்றிமாறன் தான் என தனுஷ் சொல்ல கரண் ஜோகர் ஆச்சர்யம் ஆனார். அந்த படத்தின் ரைட்ஸ் கிடைக்குமா, நான் அதை தயாரிக்கிறேன் என கூறினார். அதனால் அந்த படம் ஹிந்தியில் உருவாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் யாரின் biopicல் நடிக்க ஆசை என கேட்க 'ரஜினிகாந்த மற்றும் இளையராஜா' என தனுஷ் பதில் அளித்தார். ரஜினி வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடித்தால் எப்படி இருக்கும்? எனவும் கரண் ஜோகர் ஆச்சர்யம் தெரிவித்தார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US