சூப்பர்ஸ்டாருடன் ஐபிஎல் மேட்ச் பார்த்த தனுஷ் - வைரல் போட்டோ
தனுஷ்
தனுஷ் தற்போது ரஜினி மகளை விவாகரத்து செய்துவிட்ட நிலையில் முழுநேரமாக சினிமாவில் தான் கவனம் செலுத்தி வருகிறார். பல வருடங்களுக்கு பிறகு wunderbar நிறுவனம் மூலமாக மீண்டும் அவர் படம் தயாரிக்க போகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் அந்த படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.
தனுஷ் தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திற்காக நீண்ட தாடி வைத்து இருக்கிறார். அதே லுக்கில் தான் அவர் பட விழாக்களிலும் கலந்துகொண்டு வருகிறார்.
சூப்பர்ஸ்டார் உடன் ஐபிஎல்
இந்நிலையில் நேற்று நடந்த சென்னை vs பெங்களூரு ஐபிஎல் போட்டியை நேரில் காண தனுஷ் ஸ்டேடியதுக்கு வந்திருக்கிறார்.
அவர் அருகில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் தான் அமர்ந்து இருக்கிறார். அந்த போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் உடன் அவரும் நடித்து இருக்கிறார்.
மேலும் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் சிவராஜ்குமார் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
