பயங்கரமாக உடல் எடையை அதிகரித்த தனுஷ்.. ஆள் அடையாளம் தெரியாமல் எப்படி மாறிவிட்டார் பாருங்க
நடிகர் தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.
இதுமட்மின்றி மித்ரன் ஜவகர் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கர்ணனின் வெற்றி
தற்போது பிசியாக நானே வருவேன் படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷை, இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு இருவரும் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
மாரி செல்வராஜ் - எஸ். தாணு - தனுஷ் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற கர்ணன் படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை கொண்டாடும் விதமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.
உடல் எடை அதிகரித்த தனுஷ்
அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தனுஷ் பயங்கரமாக உடல் எடையை அதிகரித்த இருப்பதுபோல் காணப்படுகிறது.
எப்போதும் ஒல்லியான தோற்றத்தில் மட்டுமே திரையில் வரும் தனுஷ், நானே வருவேன் படத்திற்காக இப்படி உடல் எடையை அதிகரித்துள்ளது, பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..