தமிழர்கள் பிச்சை எடுக்கிறார்கள்.. நான் அப்படி பதிவிடவே இல்லை: சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட தன்யா பாலகிருஷ்ணா

By Parthiban.A Feb 02, 2024 11:34 AM GMT
Report

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் லால் சலாம் படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். இயக்குனர் பாலாஜி மோகனின் மனைவி தான் தன்யா.

தமிழர்கள் பிச்சைக்காரர்கள் என பல வருடங்களுக்கு முன்பு அவர் பதிவிட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் வைரல் ஆனது. அவருக்கு ரஜினி மகள் வாய்ப்பு கொடுத்தது ஏன் எனவும் நெட்டிசன்கள் விளாசினார்கள்.

இந்நிலையில் தன்யா பாலகிருஷ்ணா தான் அப்படி பதிவிடவே இல்லை என ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இருப்பினும் அதில் அவரது பெயர் சிக்கியிருப்பதால் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் பிச்சை எடுக்கிறார்கள்.. நான் அப்படி பதிவிடவே இல்லை: சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட தன்யா பாலகிருஷ்ணா | Dhanya Balakrishna Apologises For Post On Tamils

நான் பதிவிடவே இல்லை..

நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்.. கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன். அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அந்த பதிவு நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அதை அதிகாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை.

இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்ற பேசாமல் இருந்ததற்குக் காரணம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள் தான்.

அதிலிருந்து விலகி இருப்பதே சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல.

இவ்வாறு தன்யா பதிவிட்டு இருக்கிறார். 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US