தர்மதுரை 2 படத்தின் விஜய் சேதுபதி, சீனு ராமசாமி இல்லை.. ரசிகர்கள் அப்செட்
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான படம் தர்மதுரை.
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக செய்திகள் வெளியான நிலையில், அதில் விஜய்சேதுபதி நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.
ஆனால் இப்படத்தில் சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி இருவருமே இல்லை என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது தர்மதுரை 2 படத்தை தயாரித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விஜய்சேதுபதி, சீனுராமசாமி ஆகிய இருவருமே வெவ்வேறு படங்களில் பிசியாக இருப்பதால் தர்மதுரை-2 படத்தில் அவர்கள் இடம்பெறவில்லை.
அதனால் அப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த ரோலில் நான் நடிக்க, வேறொரு இயக்குனர் இயக்குகிறார் என்று ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
விரைவில் தர்மதுரை-2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu