காற்றுக்கென்ன வேலி சீரியல் குழுவினர் அப்படி செய்ய சொன்னார்கள், அது பிடிக்கவில்லை- சீரியலில் விலகியது குறித்து தர்ஷன்
காற்றுக்கென்ன வேலி விஜய்யில் அண்மையில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல்.
சீரியல் ஆரம்பித்ததில் இருந்து கதையில் சில நடிகர்கள் மாற்றப்பட்டனர், தற்போது சீரியல் நாயகனே மாறியுள்ளார். சூர்யா என்ற வேடத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்ற தர்ஷன் அண்மையில் இன்ஸ்டாவில் லைவ் வந்துள்ளார்.
அப்போது அவரிடம் ரசிகர்கள் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து வெளியேறிய காரணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், எனக்கு இன்னொரு ப்ராஜக்ட் இருக்கிறது, அதையும், இதையும் சேர்த்து என்னால் செய்ய முடியவில்லை,
நேரம் ஒதுக்குவது என்பது கடினமாக இருக்கிறது, இதனாலேயே காற்றுக்கென்ன வேலி சீரியல் குழுவினருடன் சில பிரச்சனை வந்தது. அதோடு எனது ஹேர் ஸ்டைலையும் மாற்றினார்கள், அது எனக்கு பிடிக்கவில்லை.
எனவே சீரியலில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.