குணசேகரனை கொலை செய்வேன்.. ஜனனி செய்த சம்பவம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரோமோ வீடியோ
எதிர்நீச்சல்
மக்கள் விரும்பும் சின்னத்திரை சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல் தொடர்கிறது. விறுவிறுப்பாக கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போது ஆதி குணசேகரனை கைது செய்ய போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது".

மீண்டும் வீட்டிற்கு வந்த ஜனனியை அரிவாளால் வெட்ட வாசலில் அறிவுக்கரசி காத்திருந்தார். ஆனால், ஜனனியிடம் அடிவாங்கி தற்போது அறிவுக்கரசியின் கை உடைந்துவிட்டது. வீட்டிற்குள் வந்த ஜனனி, மாமியார் விசாலாட்சியிடம் அனைத்து உண்மையையும் கூறிவிட்டார். "இந்த சொத்தை வளர்த்து விட்டது மட்டும்தான் உங்க மகன், ஆனால் அதன் வேர் ஜானகி தான்" என கூறுகிறார் ஜனனி.
ஜனனி செய்த சம்பவம்
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஈஸ்வரியை பார்க்க நந்தினி சென்றிருந்தார். அங்கிருந்து ஜனனிக்கு கால் செய்து பேசும் அவர், "காசு கட்டுனா தான் பாத்துக்க முடியும் என மருத்துவமனையில் உள்ளவர்கள் சொன்னது குணசேகரன் மிரட்டியதால்தான். இன்னொரு விஷயம் தெரியுமா, ஈஸ்வரி அக்கா இன்று உயிரோடு இருப்பதே மிகப்பெரிய விஷயம் என சொல்கிறார்கள்" என கூறுகிறார் நந்தினி.

இதை கேட்டவுடன் ஆதி குணசேகரனை கொலை செய்யப்போகிறேன் என தர்ஷன் கிளம்புகிறார். ஆனால், தர்ஷனை தடுத்து நிறுத்தி, "நாம் இந்த முறை சட்டத்தை நம்புவோம். கண்டிப்பாக அவரால் வெளியே வரமுடியாது" என கூறுகிறார் ஜனனி. ஆனால், தர்ஷன் "இல்லை அந்த ஆள் திருந்தமாட்டார், மீண்டும் ஜாமீனில் வெளியே வந்துவிடுவார்" என கோபத்துடன் பேசுகிறார். ஆனாலும், அவரை சாந்தப்படுத்தி கோபத்தை குறைக்கிறார் ஜனனி.
பின், நந்தினியிடம் பேசும் ஜனனி "எஸ்.பி அலுவலகத்தில் பேசி, ஈஸ்வரி அக்காவுக்கு போலீஸ் பாதுகாப்பு தரும்படி கேட்கிறேன், மீண்டும் ஈஸ்வரி அக்கா வருவார்" என கூறுகிறார்.
சக்தியை காப்பாற்றி, குடும்பத்தில் உள்ளவர்களை பாதுகாத்து, ஆதி குணசேகரனை சிறையில் அடைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்துள்ளார் ஜனனி, இனி எதிர்நீச்சலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.