ஆதி குணசேகரனை முட்டாளாக்கி மண்டபத்தில் இருந்து வெளியே வந்த தர்ஷன்.. பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தர்ஷனை திருமண மண்டபத்தில் இருந்து வெளியே அழைத்து வர வேண்டும் என சக்தி, நந்தினி மற்றும் ரேணுகா ஆகியோர் போராடி வந்தனர்.
காலை 9 மணிக்குதான் திருமணம் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், திடீரென அதிகாலை 4 மணிக்கே திருமணம் என ஆதி குணசேகரன் மாற்றிவிட்டார்.
வெளியே வந்த தர்ஷன்
உறவினர்கள் இருந்தால், திருமணத்திற்கு தடை ஏற்படுமோ என்று நினைத்து, யாரும் இல்லாமல் குடும்பத்தை மட்டுமே அருகில் வைத்துள்ளார். அப்போதுகூட யாரையும் ஆதி குணசேகரன் நம்பவில்லை.
மேக்கப் போடும் பெண்ணாக வந்த நந்தியை அறிவுக்கரசியின் அண்ணன் காதலிக்க, இதுதான் சரியான சான்ஸ் என அவரை வைத்து காயை நகர்த்தி தற்போது தர்ஷனை திருமண மண்டபத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துவிட்டனர். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.