குக் வித் கோமாளிக்கு போகமாட்டேன் என்று கூறிய தர்ஷன்.. அறிவுரை கூறி அனுப்பிவைத்த முன்னணி நடிகர்

By Kathick May 15, 2022 11:30 AM GMT
Report

நடிகர் தர்ஷன்

கனா படத்தின் மூலம் நம் மனதை கொள்ளைகொண்டவர் இளம் நடிகர் தர்ஷன். இதன்பின் தும்பா எனும் படத்திலும் இவர் ஹீரோவாக நடித்திருந்தார்.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

முதல் சில வாரங்கள் நடுவர்களிடம் இருந்து பாராட்டை பெறாமல் இருந்த தர்ஷன், தற்போது சிறந்த குக் என்று நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு பாராட்டும் அளவிற்கு வளர்த்துள்ளார்.

குக் வித் கோமாளிக்கு போகமாட்டேன் என்று கூறிய தர்ஷன்.. அறிவுரை கூறி அனுப்பிவைத்த முன்னணி நடிகர் | Dharshan Said No To Cook With Comali

இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை பிரியங்கா மோகன், டான் பட ப்ரோமோஷனுக்காக கலந்துகொண்டனர்.

சிவகார்த்திகேயன் கூறிய அறிவுரை

இதில், தனது நண்பர் தர்ஷன் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், 'முதலில் இந்த நிகழ்ச்சிக்கு போகமாட்டேன் என்று தர்ஷன் கூறினார். ஆனால், நான் தான், நீ போ என்று சொன்னேன். அங்கு சென்று அனுபங்களை கற்றுக்கொள். இங்கு இருக்கும் கேமராக்களை எதிர்கொள். அப்போது தான், உனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்' என்று கூறினாராம் சிவகார்த்திகேயன்.

இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளாராம் நடிகர் தர்ஷன். 

குக் வித் கோமாளிக்கு போகமாட்டேன் என்று கூறிய தர்ஷன்.. அறிவுரை கூறி அனுப்பிவைத்த முன்னணி நடிகர் | Dharshan Said No To Cook With Comali

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US