சத்தியமா அதை எதிர்பார்க்கல!! தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை தர்ஷ்னா ஓபன் டாக் ..
தர்ஷ்னா
விஜய் டிவியில் ஒளிபரப்பான `தமிழும் சரஸ்வதியும்' என்ற சீரியலில் வசுவாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் தர்ஷ்னா.
தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `பூவா தலையா' என்ற சீரியலில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஓபன் டாக்
சமீபத்தில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே Vs பஞ்சாப் ஐபிஎல் போட்டியைக் காண சென்ற இவர், அங்கு கொடுத்த expression சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது தெடர்பாக பேசிய, சத்தியமா இந்த அளவுக்கு ட்ரெண்ட் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.காலையில் எழுந்திருக்கும் போது நிறைய மென்ஷன்ஸ் இருந்தது. எனக்கு கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். சிஎஸ்கே என்னுடைய ஃபேவரைட் என்று தர்ஷ்னா ஷேரிங்ஸ் தெரிவித்துள்ளார்.