தீனா, பில்லா ரீ-ரிலீஸ்.. வசூல் வேட்டையில் அஜித்
ரீ-ரிலீஸ்
நடிகர் அஜித்தின் பிறந்தநாளை இன்று அவருடைய சூப்பர்ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். சமீபகாலமாக ரீ-ரிலீஸ் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் பெருகி வருகிறது.
அதுவும் விஜய்யின் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரூ. 25 கோடி வரை வசூல் செய்து புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்தது. இதை தொடர்ந்து அஜித்தின் பிறந்தநாளில் தீனா மற்றும் பில்லா ஆகிய படங்களை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.
மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், சில காரணங்களால் மங்காத்தா திரைப்படம் வெளிவரவில்லை. அதற்கு பதிலாக தான் அஜித்தின் இரண்டு மாபெரும் வெற்றி திரைப்படங்களாக தீனா மற்றும் பில்லா வெளிவந்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், இந்த இரு திரைப்படங்களும் ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்து வசூல் விவரம் வெளியாகியுள்ளது. தீனா மற்றும் பில்லா இரண்டு படங்களும் இணைந்து ரூ. 85 லட்சம் வரை ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளதாம். பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்க போகிறது என்று.