விஜய்யின் கோட் போஸ்டரில் உள்ள ஹெலிகாப்டருக்கு பின்னால் இப்படியொரு சீக்ரெட் உள்ளதா?- பிரபலம் சொன்ன தகவல்
விஜய்யின் கோட்
லோகேஷ் கனகராஜுடன் லியோ படத்தை முடித்த கையோடு விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் கோட்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பின் உச்சமாக நடந்து வருகிறது.
தற்போது இலங்கையில் தான் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம், இதில் விஜய் உள்பட படத்தில் முக்கிய பிரபலங்கள் பங்குபெற இருக்கிறார்களாம்.
ஸ்டண்ட் மாஸ்டர்
இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரியும் திலீப் சுப்பராயன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி கொண்டிருப்பதாகவும், இப்ப வரைக்கும் ஐந்தாறு ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பொங்கல் தினத்தில் வெளியான போஸ்டரின் பின்னணியில் இருக்கும் ஹெலிகாப்டர் மற்றும் பாம் வெடிக்கும் காட்சி போஸ்டர்காக உருவாக்கப்பட்டது அல்ல என்றும் அந்த காட்சிக்கு ஒரு பெரிய பின்னணி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Neeya Naana: மனைவியின் எதிர்பார்ப்பால் பேச முடியாமல் நின்ற கோபிநாத்... பரிதாப நிலையில் கணவர் Manithan
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri