இது தான் நான்.. டிடி துளி கூட மேக்கப் இல்லாமல் வெளியிட்ட போட்டோ
சின்னத்திரையில் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி. ஆனால் சமீப காலமாக அவரது உடல்நிலை காரணமாக டிவி நிகழ்ச்சிகளில் அவரை பார்க்க முடிவதில்லை.
காலில் ஆபரேஷன் செய்து இருப்பதால் அதிக நேரம் நின்று கொண்டு இருக்க முடியாது. அதனால் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார் அவர்.
விருது விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் அவர் சேரில் அமர்ந்துகொண்டு தான் பேசுவார்.
மேக்கப் இல்லாத போட்டோ
தற்போது டிடி இன்ஸ்டாகிராமில் தான் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
"இது தான் நான், என்னை மேக்கப் இல்லாமல் பார்த்து இருக்கிறீர்களா. லென்ஸ், லிப்ஸ்டிக், சிகை அலங்காரம் இல்லாமல், மேக்கப் இல்லாமல், நகைகள் இல்லாமல் இப்படி தான் இருப்பேன்" என அவர் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
