தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு இப்படி இருக்கும் கணவரை தான் பிடிக்குமாம்.. டிடி ஓபன் டாக்

By Kathick Jul 16, 2025 07:30 AM GMT
Report

திவ்யதர்ஷினி

விஜய் டிவியின் மூலம் மக்கள் மனதை கொள்ளைகொண்ட தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஜோடி நம்பர் 1, பாய்ஸ் Vs கேர்ள்ஸ் என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடிக்கு காஃபி வித் டிடி நிகழ்ச்சிதான் ஆடையாளத்தை பெற்று தந்தது.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு இப்படி இருக்கும் கணவரை தான் பிடிக்குமாம்.. டிடி ஓபன் டாக் | Dhivyadharshini Talks About How A Man Should Be

தன் திருமண நாளில் விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு.. என்ன ஆக போகுதோ

தன் திருமண நாளில் விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு.. என்ன ஆக போகுதோ

இன்று வரை டிடி என்றால் உடனடியாக அனைவருக்கும் நினைவுக்கு வருவது அந்த நிகழ்ச்சிதான். ஆனால், தற்போது இவர் உடல்நிலை காரணமாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது இல்லை. பெரிய படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

டிடி ஓபன் டாக் 

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட ஆண்னை பிடிக்கும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு இப்படி இருக்கும் கணவரை தான் பிடிக்குமாம்.. டிடி ஓபன் டாக் | Dhivyadharshini Talks About How A Man Should Be

"18 வயதில் உங்களை பார்த்து, 'யார் வீரமான ஆண்மையுடைய ஆண்' என நான் கேட்டால், 'நல்ல உயரமா, பைக்கில் வந்து, காலரா தூக்கி விட்டுகிட்டு ரவுடி மாதிரி இருக்கிற ஒருவனை சொல்வீர்கள். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் யார் ஆண்மையுடைய ஆண் என என்னை கேட்டால், 'வீட்டிற்கு போகும்போது அங்கு உங்கள் கால்களை பிடித்து விடுபவன் தான் ஆண்மையுடைய ஆண்'. நான் வீட்டிற்கு செல்லும்போது, நான் காஃபி போட்டுட்டேன், அரிசி வெச்சுட்டேன், இப்போ நாள் போய் குளிக்கிறேன், நீ வந்து காய்கறிகள் நறுக்கி வைத்துவிடு, நாம் salad செஞ்சு ஒன்றாக அமர்ந்து டிவி பார்க்கலாம் என்று சொல்பவன் தான் ஆண்மையுடைய ஆண். இப்படி ஒருவன் தனது மனைவிக்கு செய்யும்போது, அவனை சுற்றி உள்ளவர்கள், என்னடா இப்படி பண்ணிட்டு இருக்க என்று சொல்லலாம். ஆனால், அந்த பெண் சொல்லவேண்டியது, மனைவியுடன் கணவன் நடந்து செல்லும்போது மனைவியின் கைகளை பிடித்துக்கொண்டு, Handbag-ஐ சுமந்து செல்பவன்தான் ஆண்மையுடைய ஆண் என்று" என திவ்யதர்ஷினி கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US