சூப்பர்ஸ்டார் உடன் இணைந்து பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தோனி.. வைரலாகும் வீடியோ
தோனியின் பிறந்தநாள்
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனியின் பிறந்தநாள் இன்று (ஜூலை 7). திரையுலக நட்சத்த்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
2004ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இவருக்கு உலகளவில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 16 ஆண்டுகள் இருந்துள்ளார்.

இவர் அடிக்கும் சிக்ஸர்கள், குறிப்பாக ஹெலிகாப்டர் ஷாட், ஸ்டெம்பிங் செய்யும் யுத்திகள், எதிராளியை அவுட் செய்ய முயற்சிக்கும் வியூகங்கள் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது.
தோனிக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சாக்ஷி என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஸிவா எனும் மகள் உள்ளார்.

வைரலாகும் வீடியோ
இந்த நிலையில் இன்று ஜூலை 7ஆம் தேதி தனது பிறந்தநாளை 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவருடன் பாலிவுட் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான சல்மான் காணும் இருந்துள்ளார். இந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
This clip is going to break internet!
— ` (@WorshipDhoni) July 6, 2024
Salman Khan × MS Dhoni ❤#HappyBirthdayMSDhoni
pic.twitter.com/HMeFiymdUo
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
இதற்காகதான் பாகிஸ்தானியரை எடுத்தோம்: அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி - சன்ரைசர்ஸின் வெட்டோரி News Lankasri