சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையுடன் தோனி எடுத்த புகைப்படம்.. இணையத்தில் வைரல், இதோ பாருங்க
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் பிரபலமாக தற்போது பேசப்பட்டு வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் TRP-யில் நம்பர் 1 ஆக இருக்கும் இந்த சீரியல் சின்னத்திரையில் டாப் 5ல் இடம்பிடித்துள்ளது.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் கதாநாயகன் முத்துவின் பாட்டியாக நடித்து வருபவர் தான் நடிகை ரேவதி. இவர் எம்.ஜி.ஆர், சிவகுமார் போன்ற பல நட்சத்திரங்களும் படங்களில் இவர் நடித்துள்ளார்.

மௌனராகம் சீரியல் மூலம் சின்னத்திரையில் நல்ல வரவேற்பை பெற்ற ரேவதி பாட்டி தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் கலக்கிக்கொண்டிருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் இவர் ஏற்று நடித்து வரும் கதாபாத்திரங்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சீரியல் நடிகையுடன் தோனி
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தோனியுடன், சிறகடிக்க ஆசை சீரியல் ரேவதி பாட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

இது விளம்பர படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri