Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்

By Sivaraj Sep 27, 2026 04:20 AM GMT
Report

மலையாளத்தில் சஜின் கோபு, நிகிலா விமல், சைன் டாம் சாக்கோ ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள தூமகேது திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம் | Dhoomakethu Movie Review

கதைக்களம்

36 வயதாகியும் திருமணமாகாத குட்டனுக்கு ஒருவழியாக பெண் கிடைத்து விடுகிறது. காலையில் திருமணம் என்ற நிலையில் கண் விழிக்கும் குட்டன், டீயில் ஈ விழுந்து கிடப்பது, அதை வெளியே ஊற்றினால் மாமா மீது பட்டு அவர் கோபம் கொள்வது என்று எல்லாம் தவறாக நடக்கிறது.

அதன் பின்னர் 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வால் நட்சத்திரம் பூமியை கடக்கப்போகிறது என்ற செய்தியை குட்டன் பார்க்கிறார்.

Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம் | Dhoomakethu Movie Review

Runner: திரை விமர்சனம்

Runner: திரை விமர்சனம்

அப்போது லைட் கட்ட மரத்தில் ஏறிய நபர் கிளை கீழே விழுந்து காயமுற, திருமண வரவேற்பிற்காக கொண்டுவரப்பட்ட புது காரில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதையெல்லாம் கடந்து திருமண மேடைக்கு சென்றால், தாலி கட்டும் நேரத்தில் ஒரு நிகழ்வு நடக்கிறது.

அதையும் கடந்து திருமணத்தை முடித்து முதலிரவு அறைக்கு சென்ற பின், திடீரென முகமூடி அணிந்த மர்ம நபர் கதையை உடைந்துவிட்டு வந்து பேஸ்பால் பேட்டினால் குட்டனை தலையில் அடித்துக் கொல்கிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம் | Dhoomakethu Movie Review

படம் பற்றிய அலசல்

மலையாள சினிமாவில் கிரைம் திரில்லர், பேமிலி டிராமா கதைகளைத் தாண்டி ஃபேண்டசி படங்கள் அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் இந்த தூமகேது (வால் நட்சத்திரம்) திரைப்படம் அமைந்துள்ளது.

2023யில் நெய்மர் திரைப்படத்தை இயக்கியிருந்த சுதி மேடிசன்தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ஃபேண்டசி கதைக்களத்தை காமெடியாக ரசிக்கும்படி கொடுத்துள்ளார். அதற்கேற்ப கதாபாத்திர தேர்வுகளும் அமைந்துள்ளன. 36 வயதில் திருமணத்தை செய்யப்போகும் நபரின் மன ஓட்டத்தை அழகாக காட்சிபடுத்தியுள்ளார்.

Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம் | Dhoomakethu Movie Review

பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் டோரதி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது.. இதோ விவரம்

பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் டோரதி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது.. இதோ விவரம்

திருமணம் நடக்குமா நடக்காதா என்று பரபரப்புடன் படம் ஆரம்பிப்பது சுவாரசியம். அதன் பின்னரும் பார்த்த காட்சிகளையே காமெடி மூலம் விறுவிறுப்பாக கொண்டு சென்றது செம ரைட்டிங். அதே போல் சரியான இடத்தில் ட்விஸ்ட் வெளிபடும் காட்சி மிரட்டல். திருப்திகரமான கிளைமேக்ஸ் வைத்து முடித்தது சிறப்பு.

ரோமன்சம் உட்பட பல படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து வந்த சஜின் கோபு, இப்படத்தில் ஹீரோவாக கலக்கியிருக்கிறார். பார்ப்பதற்கு முரட்டுத்தனமான ஆளாக தெரியும் சஜின் பயந்து பயந்து கொடுக்கும் ரியாக்ஷன் எல்லாம் செம காமெடி. அதே சமயம் தனது உடல்வாகுவிற்கு ஏற்ப சண்டைக்காட்சியிலும் தெறிக்க விட்டிருக்கிறார்.

Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம் | Dhoomakethu Movie Review

அவருக்கு ஜோடியாக நிகில் விமல் நடித்திருக்கிறார். பெரிதாக நடிப்பதற்கு ஸ்கோப் இல்லை என்றாலும், தனக்கான கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

இவர்களைத் தாண்டி படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒரு சீனிலாவது குபீர் காமெடியை செய்து விடுகின்றனர். கேமரா, இசை, சண்டைக்காட்சிகள், எடிட்டிங் என டெக்னிக்கல் ஆக அனைத்து விஷயங்களும் சிறப்பாக அமைந்துள்ளன.

கிளாப்ஸ்

  • சஜின் கோபு
  • திரைக்கதை
  • காமெடி
  • சண்டைக்காட்சி

பல்ப்ஸ்

  • குறை சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை

மொத்தத்தில் இந்த தூமகேது நிச்சயமாக குடும்பதுடன் ரசிக்கக்கூடிய நட்சத்திரம்தான்.

Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம் | Dhoomakethu Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US