நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியான ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர்!
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டர், புதுச்சேரி நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியீடுகள் தொடர்ந்து புதுமையான முறையில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ‘துரோகம் பழகு’ படக்குழுவினர் தங்களது படத்தின் போஸ்டரை புதுச்சேரி நடுக்கடலில் வெளியிட்டு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
படக்குழுவினரின் ஏற்பாட்டில் நடுக்கடலுக்குச் சென்ற மீனவர்கள், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். கடலின் நடுவே மீனவர்களின் கைகளில் படத்தின் போஸ்டர் வெளியான இந்த நிகழ்வு,வித்தியாசமான முயற்சியாக அமைந்துள்ளது.
இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜி.எம். குமார், வனிதா விஜயகுமார், லொள்ளு சபா ஜீவா, அமுதவாணன், அப்புகுட்டி, திவாகர், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சீயோன் ராஜா இயக்கியுள்ளார். ராஜா மற்றும் பாலா இசையமைத்துள்ளனர். ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri