பைசன் படத்திற்காக பயிற்சி செய்ததில் துருவ் விக்ரமிற்கு உடம்பில் இத்தனை காயங்களா?
பைசன் படம்
மாரி செல்வராஜ், தனது படங்களில் தான் அனுபவித்த வலி, வாழ்க்கையில் பார்த்த சில பேரின் போராட்டம் போன்ற விஷயங்களை மையமாக வைத்து படங்கள் இயக்கி வெற்றியும் கண்டு வருகிறார்.
சமீபத்தில் அவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வெளியான படம் பைசன். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜினா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியான இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி மணேசன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது.

துருவ் விக்ரம்
பைசன் படத்தில் கமிட்டாகி சாதாரணமாக நடித்துவிட்டு செல்லவில்லை துருவ் விக்ரம். அதற்கான மிகவும் கடின உழைப்பு போட்டுள்ளார்.
அவர் வெளியிடும் பயிற்சி வீடியோக்களை பார்க்கும் போதே அவரின் கடின உழைப்பு நன்றாக தெரிகிறது.
இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் பயிற்சியில் கை எலும்பு ஒடஞ்சிடிச்சு, கபடி டிரைனிங் அப்போ ஒருவர் எட்டி உதைத்ததில் 3 பள்ளு ஒடஞ்சிடிச்சி.
கழுத்து முதுகு காலில் அடிபட்டு இருக்கு எனக்கு. எல்லா கபடி வீரர்களுக்கும் இதுபோல நடந்திருக்கு, எனக்கு இப்படம் ஒரு நல்ல பாடம் என கூறியுள்ளார்.