பாலிவுட்டின் இந்த ஹிட் பட ரீமேக்கில் நடிக்கிறாரா துருவ் விக்ரம்... எந்த படம் தெரியுமா?
துருவ் விக்ரம்
பிரபலங்களின் வாரிசுகள் பலர் சினிமாவில் களமிறங்குகிறார்கள்.
ஆனால் அனைவருக்குமே வெற்றி கிடைக்கிறதா என்றால் இல்லை, இப்போது உள்ள சினிமாவும், சினிமா ரசிகர்களும் மாறிவிட்டார்கள். நடிகரை பார்த்தோ அல்லது தங்களுக்கு பிடித்த பிரபலத்தின் வாரிசு என படங்கள் பார்ப்பது கிடையாது.
ஒரு படம் வெற்றியடைய இப்போது முக்கியமாக பார்க்கப்படுவது கதை தான். அப்படி பிரபலத்தின் வாரிசு என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் துருவ் விக்ரம்.
வர்மா படத்தில் நாயகனாக நடித்தவர், மஹான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ரீமேக் படம்
துருவ் விக்ரம் ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான கில் என்ற ஆக்ஷன் திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றிப் பெற்றது.
இந்தியாவில் உருவான சிறந்த ஆக்ஷன் படங்களில் ஒன்றாக இந்த படம் கவனம் பெற்றது.
இப்பட தென்னிந்திய ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ரமேஷ் வர்மா பெற்றுள்ளாராம், இப்பட ரீமேக்கில் நடிக்க துருவ் விக்ரம் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
