அனுபமா பரமேஸ்வரன் - துருவ் விக்ரம் காதலிக்கிறார்களா? வைரலாகும் முத்த புகைப்படம்
அனுபமா - மாரி செல்வராஜ்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் பைசன் படத்தில் நடித்து வருகிறார்கள்.
டேட்டிங்..?
இந்த நிலையில், இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசு எழுந்துள்ளது. அனுபமா - துருவ் விக்ரம் இருவரும் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்த நிலையில், இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Spotify-ல் ப்ளூ மூன் என்கிற பிளே லிஸ்டில் அனுபமா போல் தோற்றமளிக்கும் ஒரு பெண்ணும், துருவ் விக்ரம் போல் தோற்றமளிக்கும் ஒரு பெண்ணும் முத்தம் கொடுக்கும்படி புகைப்படம் ஒன்று உள்ளது.
இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்கிற செய்தி பரவ துவங்கிவிட்டது. ஆனால், இந்த பிளே லிஸ்டை இவர்கள் இருவரும் துவங்கவில்லை என கூறப்படுகிறது.
சிலர் இது படத்திற்கான விளம்பரமாக இருக்கும் என்கின்றனர். மேலும் இதுவரை இதுகுறித்து அனுபமா மற்றும் துருவ் விக்ரம் இருவரும் விளக்கம் கொடுக்கவில்லை. தற்போது இந்த பிலே லிஸ்ட் பக்கம் நீக்கப்பட்டுள்ளது.