நாளை ரிலீஸ் ஆகவுள்ள Bison படம் ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
பைசன் படம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2024, கடந்த வருடம் வெளியான திரைப்படம் வாழை.
அப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது, அதில் நடித்தவர்களுக்கும் நல்ல பாராட்டு கிடைத்தது. அப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் பைசன்.
இதில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ப்ரீ புக்கிங்
வரும் அக்டோபர் 17, அதாவது நாளை இப்படம் வெளியாக இருக்கிறது.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூலிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ள நிலையில் இப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் இதுவரை ரூ. 60 லட்சத்திற்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
