பாக்ஸ் ஆபிஸில் பைசன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பைசன்
மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் குறித்தும் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
துருவ் விக்ரம் நடிப்பில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்காக துருவ் போட்ட உழைப்பை அனைவரும் பாராட்டி பேசினார்கள்.

இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன், லால், அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.
வசூல்
இப்படம் இதுவரை 17 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 70+ கோடி வசூல் செய்துள்ளது.

கண்டிப்பாக இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு வரப்போகிறது என்று.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri