விஜய் மகனுடன் கூட்டணி சேர நினைக்கும் விக்ரம் மகன்.. இது மட்டும் நடந்தால்?
நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது அப்பா உடன் சேர்ந்து நடித்து இருக்கும் மஹான் படத்திற்கு கிடைத்து வரும் நல்ல வரவேற்பால் மகிழ்ச்சியில் இருக்கிறார். நேரடியாக ஓடிடியில் இந்த படம் சில தினங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் துருவ் ஒரு பேட்டியில் தான் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயார் என கூறி இருப்பது தற்போது வைரல் ஆகி வருகிறது.
விஜய் மகன் தற்போது வெளிநாட்டில் பிலிம் மேக்கிங் படித்து வருகிறார். அவ்வப்போது அவர் இயக்கும் குறும்படங்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன. தற்போது அவர் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக விக்ரம் மகன் தெரிவித்து இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யம் ஏற்படுத்தி இருக்கிறது.
அவர்கள் கூட்டணி சேர்ந்தால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan