துரந்தர் படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும்... அடேங்கப்பா இத்தனை கோடியா
துரந்தர்
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார்.

மேலும் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் வசூலில் வேட்டையாடி 2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்கிற சாதனையை துரந்தர் படைத்தது.
துரந்தர் 2 ப்ரீ புக்கிங்
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து துரந்தர் 2 வருகிற 19ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், துரந்தர் 2 படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

துரந்தர் 2 திரைப்படம் இதுவரை ரூ. 110 கோடி ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல் நாள் உலகளவில் ரூ. 200 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் துரந்தர் 2 எவ்வளவு பெரிய சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் செய்யப்போகிறது என்று.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri