துரந்தர் 2 படத்தின் ரன் டைம் இவ்வளவு நேரமா.. ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன
துரந்தர்
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் அக்ஷய் கன்னா, மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும் நடிகை சாரா அர்ஜுன் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த துரந்தர் உலகளவில் ரூ. 1250 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் இரண்டாம் பாகத்தின் மீது எத்தகைய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
துரந்தர் 2 ரன் டைம்
வருகிற மார்ச் 19ஆம் தேதி துரந்தர் இரண்டாம் பாகம் வெளியாகிறது. சமீபத்தில் இதனுடைய டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ
இந்த நிலையில், துரந்தர் திரைப்படத்தின் ரன் டைம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 55 நிமிடங்கள். கிட்டதட்ட நான்கு மணி நேரம் இப்படத்தின் ரன் டைம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு படத்தின் ரன் டைம் இவ்வளவு மணி நேரமா என ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். துரந்தர் முதல் பாகத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 34 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri