தமிழ்நாட்டில் துரந்தர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
துரந்தர் 2
இயக்குநர் ஆத்தியா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து துரந்தர் பார்ட் 2 திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.அதன்படி, கடந்த வாரம் வெளிவந்த துரந்தர் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாளில் இருந்து வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழக வசூல் விவரம்
இதுவரை உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் துரந்தர் 2 வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இந்திய சினிமாவில் 10வது ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக டாப் 10ல் துரந்தர் 2 இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் துரந்தர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் - மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு IBC Tamilnadu