காந்தாரா வசூலை முறியடிக்கப்போகும் துரந்தர்.. 2025ல் அதிக வசூல் இந்த படம் தானா
துரந்தர்
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகி கடந்த 5ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் துரந்தர். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ஹீரோவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார்.

மேலும், மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல் விவரம்
இந்த நிலையில், இதுவரை துராந்தர் திரைப்படம் உலகளவில் ரூ. 810+ கோடி வசூல் செய்துள்ளது. ரூ. 855 கோடி வசூல் செய்து, 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படமாக காந்தாரா சாப்டர் 1 உள்ளது.

இந்த வசூலை ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் காந்தாரா சாப்டர் 1 வசூலை முறியடித்து 2025ல் அதிக வசூல் செய்த படமாக துரந்தர் சாதனை படைக்கிறதா என்று.