துராந்தர் படத்தின் பட்ஜெட் ரூ. 250 கோடி.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
துரந்தர்
கடந்த ஆண்டு வெளிவந்த அனைத்து திரைப்படங்களின் வசூலையும் அடித்து நொறுக்கி, 2025ல் நம்பர் 1 வசூல் செய்த படம் என்கிற சாதனையை துரந்தர் பார்ட் 1 படைத்தது.

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும் நடிகை சாரா அர்ஜுன் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

துரந்தர் பார்ட் 1 படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக மார்ச் மாதம் வெளிவரவிருக்கும் துரந்தர் பார்ட் 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
பட்ஜெட் மற்றும் மொத்த வசூல்
இந்த நிலையில், துரந்தர் பார்ட் 1 படத்தின் பட்ஜெட் மற்றும் அப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 250 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்ட துரந்தர் படம் உலகளவில் ரூ. 1350 கோடி மொத்தமாக வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், துரந்தர் பார்ட் 2 படம் இதைவிட அதிக வசூல் செய்தால், மாபெரும் லாபம் தயாரிப்பாளருக்கும் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

திரையரங்கில் சக்கப்போடு போட்ட துரந்தர் திரைப்படம் தனது வசூல் வேட்டையை தொடர்ந்து தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.