2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் இதுதான்.. துரந்தர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
துரந்தர்
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகி கடந்த 5ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் துரந்தர். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ஹீரோவாக ரன்வீர் சிங் நடித்திருந்தார்.

மேலும், மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல்
இதனால் 24 நாட்களை வெற்றிகரமாக கடந்து பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ. 1100 கோடி வசூல் செய்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ரூ. 1100 கோடி வசூல் செய்துள்ள துரந்தர் திரைப்படம், 2025ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமே ரூ. 862 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu
ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் - பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு! IBC Tamilnadu